வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மோசமாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு உலகக் கோப்பைக்கான கனவு கனவாகவே அமைந்துவிட்டது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று விளையாடினார். அவர் ஒருநாள் போட்டிகளில் 9, 51 மற்றும் டி20 போட்டிகளில், 12, 7 மற்றும் 13 என்று சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார்.
ஆசியக் கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
இதன் மூலமாக சஞ்சு சாம்சனுக்கான எல்லா கதவுகளும் மூடப்பட்டுவிட்ட்து என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு அணியும் உலக கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்து வருகிறது. ஆனால், இந்திய அணி மட்டும் வீரர்களின் உடற்தகுதிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. எனினும், வரும் 20 ஆம் தேதி ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பச்சிளம் குழந்தைக்கு உதவி செய்த ஷ்ரேயாஸ் ஐயர்; வைரலாகும் வீடியோ!
அதே போன்று ஆசிய கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. வரும் 30ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கை இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன. இந்த தொடரிலும் அவர் இடம் பெற வாய்ப்பில்லை. சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பில்லை என்றால் கே எல் ராகுல் மற்றும் ஷ்ரேயா இயர் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இடம் பெற்று தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த இருவரும் சில தினங்களுக்கு முன்பு 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடினர். உடல் தகுதியை நிரூபித்து ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.