Womens T20 WC:அரைசதம் அடித்து தனிநபராய் இந்திய அணியை கரைசேர்த்த ஸ்மிரிதி மந்தனா! அயர்லாந்துக்கு சவாலான இலக்கு

Published : Feb 20, 2023, 08:39 PM IST
Womens T20 WC:அரைசதம் அடித்து தனிநபராய் இந்திய அணியை கரைசேர்த்த ஸ்மிரிதி மந்தனா! அயர்லாந்துக்கு சவாலான இலக்கு

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 155 ரன்கள் அடித்து, 156 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றை நெருங்குகிறது. க்ரூப் பி-யிலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. க்ரூப் பி-யில் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், இன்று அயர்லாந்தை எதிர்கொண்டு ஆடிவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷிகா பாண்டே, ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.

IND vs AUS: கேஎல் ராகுல் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி..! ஹர்பஜன் சிங் அதிரடி

அயர்லாந்து மகளிர் அணி:

எமி ஹண்டர், கேபி லெவிஸ், ஆர்லா பிரெண்டெர்காஸ்ட், எய்மீர் ரிச்சர்ட்ஸன், லூயிஸ் லிட்டில், லாரா டிலானி (கேப்டன்), அர்லென் கெல்லி, மேரி வால்ட்ரான் (விக்கெட் கீப்பர்), லீ பால், சாரா முர்ரே, ஜார்ஜினா டெம்ப்சி.

IND vs AUS: அடுத்தடுத்த தோல்விகள்.. ஆஸ்திரேலிய அணி செய்த தவறுகளை லிஸ்ட் போட்டு அடித்த மைக்கேல் கிளார்க்

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஒருமுனையில் ஷஃபாலி வெர்மா (24), ஹர்மன்ப்ரீத் கௌர்(13), ரிச்சா கோஷ் (0), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (19) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அரைசதம் அடித்தார். அபாரமாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்தார். ஸ்மிரிதி மந்தனாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 155 ரன்களை குவித்த இந்திய அணி, 156 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.
 

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?