
மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதி சுற்றை நெருங்குகிறது. க்ரூப் பி-யிலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. க்ரூப் பி-யில் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், இன்று அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின்னர் ராதா யாதவுக்கு பதிலாக தேவிகா வைத்யா சேர்க்கப்பட்டுள்ளார்.
IND vs AUS: கேஎல் ராகுல் துணை கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி..! ஹர்பஜன் சிங் அதிரடி
இந்திய மகளிர் அணி:
ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேவிகா வைத்யா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ஷிகா பாண்டே, ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.
அயர்லாந்து மகளிர் அணி:
எமி ஹண்டர், கேபி லெவிஸ், ஆர்லா பிரெண்டெர்காஸ்ட், எய்மீர் ரிச்சர்ட்ஸன், லூயிஸ் லிட்டில், லாரா டிலானி (கேப்டன்), அர்லென் கெல்லி, மேரி வால்ட்ரான் (விக்கெட் கீப்பர்), லீ பால், சாரா முர்ரே, ஜார்ஜினா டெம்ப்சி.