மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ள நிலையில் ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடர் போன்று, பெண்களுக்கும் மகளிர் பிரீமியர் லீக் எனப்படும் டபிள்யூபிஎல் WPL தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது டிராபியை கைப்பற்றியது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான 2ஆவது சீசன் வரும் இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்த தொடரில் மொத்தமாக 22 போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், எல்லா போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டியானது மார்ச் 17 ஆம் தேதி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருக்கிறது. முதல் சீசன் ஹோம் பார்மேட்டில் நடந்தது. ஆனால், இந்த சீசனுக்கான எல்லா போட்டிகளும் டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடத்தப்படுகிறது.
IPL 2024 : வெளியானது ஐ.பி.எல் 2024க்கான அட்டவணை - முதல் போட்டியில் மோதப்போகும் அணிகள் எது தெரியுமா?
இந்த 5 அணிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரில் மோதும். மேலும் முதல் இடத்தில் இருக்கும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். முதல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியானது சாம்பியனானது.
இந்த நிலையில் இன்று தொடங்கும் டபிள்யூபிஎல் தொடருக்கு முன்னதாக இந்த சீசனுக்கான ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது. இதில், ஒவ்வொரு அணியின் கலாச்சார நடன காட்சிகள் கொண்ட வீடியோ இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்று தொடங்கும் 2ஆவது சீசனில் ஷாருக் கான், டைகர் ஷெராஃப், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், சித்தார்த் மல்கோத்ரா என்று பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
𝙉𝙖𝙝𝙞 𝙈𝙖𝙝𝙖𝙡𝙤𝙣 𝙆𝙞 𝙍𝙖𝙣𝙞, 𝙃𝙖𝙞 𝙅𝙝𝙖𝙣𝙨𝙞 𝙠𝙞 𝙌𝙪𝙚𝙚𝙣𝙨 𝙝𝙪𝙢.
Welcome to , ye hai ‘Cricket ka Queendom' 👑 👑😍 pic.twitter.com/jmkNIggyZz