NZ vs AUS 2nd T20I: ஆடம் ஜம்பா சுழலில் சுருண்ட நியூசிலாந்து – வெற்றியோடு 2-0 என்று தொடரை கைப்பற்றிய ஆஸி.,!

By Rsiva kumar  |  First Published Feb 23, 2024, 3:53 PM IST

நியூசிலாந்திற்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் கட்டமாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

        இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டி ங் செய்த ஆஸ்திரேலியா 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Tap to resize

Latest Videos

பின்னர், எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் 6, வில் யங் 7, மிட்செல் சாண்ட்னர் 7 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்க் சாப்மேன் 2, ஜோஷ் கிளார்க்சன் 10, ஆடம் மில்னே 0, லாக்கி ஃபெர்குசன் 4, பென் சியர்ஸ் 2 என்று ஒவ்வொரு வீரரும் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கிளென் பிலிப்ஸ் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். டிரெண்ட் போல்ட் 16 ரன்கள் எடுத்தார். ஜோஷ் கிளார்க்சன் 10 ரன்கள் எடுத்தார். இந்த மூவரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றைப்படை ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக நியூசிலாந்து 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும், நாதன் எல்லீஸ் 2 விக்கெட்டும், ஜோஷ் ஹசல்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்று கைப்பற்றியுள்ளது.

click me!