Watch IND vs ENG 4th Test: டிராவிட்டிடம் கேப், தாயின் ஆசிர்வாதம் – அறிமுக டெஸ்ட்டில் சாதனை படைத்த ஆகாஷ் தீப்!

Published : Feb 23, 2024, 01:03 PM IST
Watch IND vs ENG 4th Test: டிராவிட்டிடம் கேப், தாயின் ஆசிர்வாதம் – அறிமுக டெஸ்ட்டில் சாதனை படைத்த ஆகாஷ் தீப்!

சுருக்கம்

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பீகாரைச் சேர்ந்த ஆகாஷ் தீப் தனது அறிமுக போட்டியிலேயே இதுவரையில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் அறிவித்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார்.

India vs England Test: முதல் இந்திய வீரராக இங்கிலாந்திற்கு எதிராக 100 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான இந்திய அணியின் தொப்பியை தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு குடும்பத்தினரை சந்தித்து தாயாரிடம் ஆசி பெற்றார். மேலும், அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணியைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் தொடக்க ஓவர்களை வீசினர்.

Mohammed Shami: சுப்மன் கில்லுக்கு சிக்கல், ஷமி விலகல் – டி20 உலகக் கோப்பைக்கும் டவுட் தானாம்!

ஆகாஷ் தீப் வீசிய 4ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் ஜாக் கிராவ்லி கிளீன் போல்டானார். இது அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் விக்கெட். ஆனால், அதனை நோபாலாக வீச ஆகாஷ் தீப் ஏமாற்றம் அடைந்தார். அதன் பிறகு மீண்டும் 9.2ஆவது ஓவரில் பென் டக்கெட் விக்கெட்டை கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

அதே ஓவரில் 4ஆவது பந்தில் ஆலி போப் விக்கெட்டையும் எல்பிடபிள்யூ முறையில் எடுத்தார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காத நிலையில் ரோகித் சர்மா ரெவியூ எடுக்க, டிவி ரீப்ளேயில் கிளீன் எல்பிடபிள்யூ வர நடுவர் தனது முடிவை மாற்றி அவுட் கொடுத்தார். அதன் பிறகு 11.5ஆவது ஓவரில் ஜாக் கிராவ்லியை 2ஆவது முறையாக போல்டாக்கி உணவு இடைவேளைக்கு முன்பு வரை 3 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். அறிமுக போட்டியிலே சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆகாஷ் தீப்பிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

IVPL 2024: கிரிக்கெட் ஜாம்பவான்கள் விளையாடும் ஐவிபிஎல் – வரும் 23 ஆம் தேதி ஆரம்பம்!

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

நான் ஒன்றும் அவுட் ஆஃப் பார்ம் இல்லை.. ஜஸ்ட் ரன் அவுட் தான்.. மனம் தளராத சூர்யகுமார் யாதவ்
IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!