இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டுமென்றால் கண்டிப்பாக பும்ரா விளையாட வேண்டும் என்று இலங்கை வீரர் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா கைப்பற்றியது. அதன் பிறகு ஐசிசி தொடரில் ஒன்றில் கூட இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டுமென்றால் பும்ரா விளையாட வேண்டும் என்று இலங்கை வீரர் பெர்னாண்டோ கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணியின் வெற்றியை எடுத்துப் பார்த்தால் அதில் பும்ராவின் பங்களிப்பு என்ன என்பது தெரியும்.
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக புதிய டாட்டூ போட்டுக் கொண்ட விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!
போட்டியை தனியாக எடுத்துச் செல்லக் கூடியவர். பும்ராவுக்கு என்ன காயம் ஏற்பட்டது என்று தகவல் ஏதுவும் தெரியவில்லை. ஆனால், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பும்ரா விளையாட வேண்டும். இந்திய அணியின் முக்கியமான வீரர் அவர் தான். உலகக் கோப்பையை கைப்பற்ற முதல் தகுதி வாய்ந்த அணியே இந்தியா தான்.
4ஆவது இடத்துல ஃபார்முல இல்லாத ஒருத்தர போய் 7ஆவது இடத்துல இறக்கலாமா? அஜய் ஜடேஜா சரமாரியாக கேள்வி!
ரோகித் சர்மாவும், ஜஸ்ப்ரித் பும்ராவும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். பும்ரா இல்லையென்றால் உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்பே இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளும், 30 டெஸ்ட் போட்டிகளில் 128 விக்கெட்களிலும் 70 டி20 போட்டிகளில் 60 விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன் அவுட் ஆனபோதும் ஜிங் பெயில்ஸ் பேட்டரி பிரச்சனையால் தப்பித்த கருணாரத்னே!