IPL 2023: மிரட்டலான வீரர்களுடன் செம கெத்தா களமிறங்கும் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்! வலுவான ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Mar 26, 2023, 6:02 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 


ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்த சீசனில் களமிறங்குகிறது.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரும் மேட்ச் வின்னருமான ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக ஆடவில்லை. அது அந்த அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அவருக்கு நிகரான மிரட்டல் ஃபாஸ்ட் பவுலரான ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் இருப்பதால் அவரை வைத்து பும்ராவின் இழப்பை ஈடுகட்டிவிடும் மும்பை இந்தியன்ஸ் அணி. இருந்தாலும் பும்ராவும் ஆர்ச்சரும் இணைந்து இந்த சீசனில் ஆடினால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.

Tap to resize

Latest Videos

செம கடுப்பில் இருந்த ஜடேஜாவை சமாதானப்படுத்திய தோனி..! கண்டிஷன் போட்டு சிஎஸ்கே ஆட ஒப்புக்கொண்ட ஜடேஜா

ரோஹித் சர்மா தலைமையில் இந்த சீசனில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 

கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்குவார். 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 4ம் வரிசையில் ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபினிஷர்களாக திலக் வர்மா, டிம் டேவிட் ஆகிய இருவரும் ஆடுவார்கள். 

ஃபாஸ்ட் பவுலர்களாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஜெய் ரிச்சர்ட்ஸனும் இருக்கிறார். ஆனால் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் இடது கை ஃபாஸ்ட் பவுலர் என்ற வகையிலும், அவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி செட்டப்பில் ஆடியிருக்கிறார் என்பதாலும், அவர் ஆடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான உள்நாட்டு வீரர் ராமன் தீப் சிங் ஆடுவார்.

ஸ்பின்னர்களாக இளம் ஸ்பின்னர்களான குமார் கார்த்திகேயா மற்றும் ரித்திக் ஷோகீன் ஆகிய இருவரும் ஆடுவார்கள். இவர்களுடன் திலக் வர்மாவும் ஆஃப் ஸ்பின் வீசுவார். கேமரூன் க்ரீனும் ஃபாஸ்ட் பவுலிங் வீசுவார். ஆல்ரவுண்டர்கள் நிறைய இருப்பதால் அணியின் பேலன்ஸ் சிறப்பாக உள்ளது. 

IPL 2023: ஆர்சிபி தான் இந்த சீசனின் பெஸ்ட் பவுலிங் அட்டாக்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், ரித்திக் ஷோகீன், ராமன் தீப் சிங். 
 

click me!