சிஎஸ்கேவிற்கு ஆடுவதில் உடன்பாடில்லாமல் இருந்துவந்த ரவீந்திர ஜடேஜாவிடம் தோனியே நேரடியாக பேசித்தான் ஒப்புக்கொள்ள வைத்துள்ளார். திரைமறைவில் நடந்த சம்பவத்தை பார்ப்போம்.
சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்பவர் ஜடேஜா. ஐபிஎல்லில் 210 போட்டிகளில் ஆடி 2502 ரன்களை குவித்துள்ள ஜடேஜா, 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்கு சிரப்பான பங்களிப்பை செய்யக்கூடிய மிகப்பெரிய மேட்ச் வின்னர் ஜடேஜா.
ஐபிஎல்லில் 2012ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஜடேஜா, சிஎஸ்கே அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை செய்து, அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட நிலையில், தொடர் தோல்விகளின் விளைவாக சீசனின் இடையே தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது ஜடேஜாவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் அந்த சீசனில் அதன்பின்னர் அவர் ஆடவில்லை.
IPL 2023: ஆர்சிபி தான் இந்த சீசனின் பெஸ்ட் பவுலிங் அட்டாக்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
கேப்டனாக நியமிக்கப்பட்டு பின்னர் சீசனின் இடையே மாற்றப்பட்டதை பெரும் அவமானமாகவும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் கருதிய ஜடேஜா, சிஎஸ்கே அணி மீது கடும் அதிருப்தியடைந்தார். சிஎஸ்கே அணியை சமூக வலைதளத்தில் அன்ஃபோலா செய்தார். அதனால் அடுத்த சீசனில் ஜடேஜா வேறு அணிக்கு ஆடலாம் என்று பேசப்பட்டது. அவரை 2 அணிகள் கேட்டதாகவும் கூறப்பட்டது. அண்மையில் கூட டெல்லி கேபிடள்ஸ் அணியுடன் ஜடேஜாவை சிஎஸ்கே டிரேடிங் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் ஜடேஜாவை ஒரு தரமான பிளேயர் என்ற முறையில் இழக்க விரும்பாத சிஎஸ்கே கேப்டன் தோனி, அவர் அணியிலிருந்து வெளியேறுவதை விரும்பவில்லை. கடந்த சீசனுக்கு முன் நடந்த மெகா ஏலத்தில் ஜடேஜாவை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்ததால், ஜடேஜா இன்னும் 2 சீசன்களுக்கு சிஎஸ்கே அணியின் ஒப்புதல் இல்லாமல் அந்த அணியிலிருந்து விலகமுடியாது.சிஎஸ்கே அணி அனுமதித்தால் மட்டுமே அவரால் வேறு அணிக்கு செல்ல முடியும். அந்தவகையில் அவரை அணியிலிருந்து வெளியேற விடவில்லை சிஎஸ்கே.
வரும் 31ம் தேதி முதல் தொடங்கும் ஐபிஎல் 16வது சீசனில் ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக ஆடவுள்ள நிலையில், ஜடேஜாவை சிஎஸ்கே அணி சமாதானப்படுத்தியது எப்படி என்று தகவல் வெளியாகியுள்ளது.
SA vs WI: ரோவ்மன் பவல் சிக்ஸர் மழையால் கடின இலக்கை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
சிஎஸ்கே அணி மீது அதிருப்தியில் இருந்த ஜடேஜாவை கேப்டன் தோனி மற்றும் சிஎஸ்கே சி.இ.ஒ காசி விஸ்வநாதன் ஆகிய இருவரும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, சீசனின் இடையே தன்னை கேப்டன்சியிலிருந்து நீக்கியது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியதாக ஜடேஜா கூறியுள்ளார். அந்த சீசனில் சரியாக ஆடாததும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிஎஸ்கே அணியில் எதிர்காலத்தில் தான் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிட்டுத்தான் ஜடேஜா சிஎஸ்கே அணியில் தொடர்ந்து ஆட ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2023: ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸி., அதிரடி ஆல்ரவுண்டரை தட்டி தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்
கடந்த சீசனில் ஜடேஜா 10 போட்டிகளில் ஆடி வெறும் 116 ரன்கள் மட்டுமே அடித்ததுடன், 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். கடந்த சீசனில் சரியாக ஆடாததால் சீசனின் இடையே எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.