IPL 2023: நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்! ஆல்ரவுண்டர்கள் நிறைந்த அருமையான அணி

By karthikeyan VFirst Published Mar 26, 2023, 2:46 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்த நிலையில், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் 15 சீசனில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஆடிவரும் இந்த 3 அணிகளும் ஒருமுறை கோப்பையை வெல்ல முடியாமல் திணறிவரும் நிலையில், கடந்த சீசனில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் கோப்பையை வென்று அசத்தியது.

IPL 2023: ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸி., அதிரடி ஆல்ரவுண்டரை தட்டி தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்

வரும் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியன் அணியான சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

ஷுப்மன் கில்லுடன் விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா தொடக்க வீரராக இறங்குவார். 3ம் வரிசையில் சீனியர் வீரரான கேன் வில்லியம்சனும், 4ம் வரிசையில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஆடுவார்கள். 5ம் வரிசையில் கடந்த சீசனில் குஜராத் அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்த அதிரடி வீரர் டேவிட் மில்லர் இறங்குவார். ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர்கள் ராகுல் டெவாட்டியா மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவருடன் சாய் கிஷோர் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி, அல்ஸாரி ஜோசஃப் மற்றும் யஷ் தயால் ஆகிய மூவரும் ஆடுவார்கள். இவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் ஃபாஸ்ட் பவுலிங் வீசுவார். ஆல்ரவுண்டர்கள் நிறைந்த அணியாக இருப்பதால் பவுலிங் ஆப்சனும் அதிகமாக இருக்கிறது; பேட்டிங் டெப்த்தும் ஆழமாக இருக்கிறது.

IPL 2023: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்..! மிரட்டலான டீம்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், முகமது ஷமி, சாய் கிஷோர், யஷ் தயால்.
 

click me!