டேவிட் மில்லர் காட்டடி பேட்டிங்; 11 ஓவரில் 131 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா! வெஸ்ட் இண்டீஸுக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Mar 25, 2023, 8:51 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவரில் 131 ரன்களை குவித்து, 132 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்கா.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தென்னாப்பிரிக்கா வென்றது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அதைத்தொடர்ந்து டி20 தொடர் தொடங்கி நடந்துவருகிறது. முதல் டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

IPL 2023: ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸி., அதிரடி ஆல்ரவுண்டரை தட்டி தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ரோஸ்டான் சேஸ், ரொமாரியோ ஷெஃபெர்டு, அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், ஷெல்டான் காட்ரெல், அல்ஸாரி ஜோசஃப்.

தென்னாப்பிரிக்கா அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், வைன் பார்னெல், சிசாண்டா மகளா, ஃபார்ச்சூன், அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷம்ஸி.

IPL 2023: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்..! மிரட்டலான டீம்

மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டதால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்ரிக்ஸ் 12 பந்தில்  2 சிக்ஸருடன் 21 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் காட்டடி அடித்து 22 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்களை விளாசி அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சிசாண்டா 5 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்களை விளாச, 11 ஓவரில் 131 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 132 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணையித்தது.
 

click me!