SA20: வில் ஜாக்ஸ் காட்டடி பேட்டிங்.. 20 ஓவரில் 216 ரன்களை குவித்த கேபிடள்ஸ்..! சன்ரைசர்ஸுக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jan 14, 2023, 7:14 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ப்iரிட்டோரியா கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 216 ரன்களை குவித்து, 217 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று செஞ்சூரியனில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், ரைலீ ரூசோ, தியுனிஸ் டி புருய்ன், ஷேன் டாட்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், வைன் பார்னெல் (கேப்டன்), ப்ரிட்டோரியஸ், ஈதன் போஷ், அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.

மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி:

ஜேஜே ஸ்மட்ஸ், சாரெல் எர்வீ, டாம் அபெல், ஜோர்டான் காக்ஸ் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜேம்ஸ் ஃபுல்லர், மார்கோ யான்சென், பிரைடான் கார்ஸ், சிசாண்டா மகலா, பார்ட்மேன்.

முதலில் பேட்டிங் ஆடிய பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூசோ 20 ரன்களுக்கு அவுட்டானார். அதிரடியாக பேட்டிங் ஆடி அதிவேகமாக ஸ்கோரை உயர்த்திய தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் அரைசதம் அடித்தார். 3வது விக்கெட்டுக்கு அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய தியுனிஸ் டி புருய்ன் 23 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

ரஞ்சி தொடரில் நல்லா ஆடுறவங்களுக்கு மதிப்பே இல்லையா? அந்த பையனை எப்படி புறக்கணிக்கலாம்? இர்ஃபான் பதான் ஆதங்கம்

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய வில் ஜாக்ஸ் 46 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து 8 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 46 பந்தில் 92 ரன்களை குவிக்க, அவரது அதிரடியால் 20 ஓவரில் 216 ரன்களை குவித்த கேபிடள்ஸ் அணி, 217 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

click me!