அடி மேல் அடி வாங்கிய பாகிஸ்தான்: முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!

By Rsiva kumarFirst Published Jan 14, 2023, 5:50 PM IST
Highlights

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிராவில் முடிந்த நிலையில், முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

IND vs SL 3rd ODI: பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம்!

இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று கராச்சியில் நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஃபகர் ஜமான் அதிரடியாக ஆடி 100 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 77 ரன்கள் சேர்த்தார். அகா சல்மான் 45 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது.

லலித் மோடிக்கு இரட்டை கொரோனா பாதிப்பு: விரைவில் குணமடைய ஹர்பஜன் சிங் வாழ்த்து!

இதையடுத்து 281 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்த அணியில் ஆலன் 25 ரன்களில் ஆட்டமிழக்க கான்வே 52 ரன்னிலும், வில்லியம்சன் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதோடு, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி இன்னொரு சாதனையும் நியூசிலாந்து அணி படைத்தது. அதாவது, முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேட்டக்கார பசங்களா இருக்காங்களே: ஆட்டம் ஓவராத்தான் இருக்கு: வைரலாகும் கோலி, இஷான் கிஷான் டான்ஸ் வீடியோ!

இதற்கு முன்னதாக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி!

click me!