BBL: பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Jan 14, 2023, 5:42 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் மெல்பர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் 6 ரன் வித்தியாசத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மெல்பர்னில் இன்று நடந்த மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி:

ஜோ கிளார்க் (விக்கெட் கீப்பர்), தாமஸ் ரோஜர்ஸ், ஹில்டன் கார்ட்ரைட், பியூ வெப்ஸ்டெர், நிக் லார்கின், ஜேம்ஸ் செய்மார், கிளைண்ட் ஹின்ச்லிஃப், லுக் உட், பிராடி கௌச், லியாம் ஹாட்ச்செர், ஆடம் ஸாம்பா (கேப்டன்).

ரஞ்சி தொடரில் நல்லா ஆடுறவங்களுக்கு மதிப்பே இல்லையா? அந்த பையனை எப்படி புறக்கணிக்கலாம்? இர்ஃபான் பதான் ஆதங்கம்

மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி:

ஜேக் ஃப்ரேசர், மார்டின் கப்டில், சாம் ஹார்ப்பெர் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஜோனாதன் வெல்ஸ், மேத்யூ கிரிட்ச்லி, வில் சதர்லேண்ட், ருவாந்தா கெல்லெபோதா, டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன் ஃபவாத் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் (11) மற்றும் ஜேக் ஃபிரேசர் (1) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய சாம் ஹார்ப்பெர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஹார்ப்பெர் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசையில் வெல்ஸ் அதிரடியாக ஆடி 24 பந்தில் 44 ரன்களை விளாச, 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவரை இறக்குங்க.. சும்மா தெறிக்கவிட்ருவாப்ள - ஓஜா

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோ கிளார்க் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 37 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் அடித்து கிளார்க் ஆட்டமிழந்தார். தாமஸ் ரோஜர்ஸ் (27), கார்ட்ரைட்(12), வெப்ஸ்டெர்(29) ஆகியோர் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறினர். ஹின்ச்லிஃப்(1), செய்மார்(3), லுக் உட்(1) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கடைசி ஓவரில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வீசிய சதர்லேண்ட் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, 6 ரன் வித்தியாசத்தில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 

click me!