தான் ஏன் விவசாயியாக மாறினேன் என்ற உண்மையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனி தனது வாழ்க்கையில் கிரிக்கெட் வீரர், வழிகாட்டி என பல அவதாரங்களில் வலம் வந்துள்ளார். இது தவிர ஏராளமான நிறுவனங்களில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது திரைப்பட தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவர் இந்திய பிராந்திய இராணுவத்தில் ஒரு கெளரவ லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு தகுதிவாய்ந்த பராட்ரூப்பர் ஆவார். இது தவிர தோனி ஒரு விவசாயியாகவும் இருக்கிறார். இதன் மூலமாகவும் வருமானம் குவித்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அன்று முதல் இன்று வரை விவசாயத்தை கையில் எடுத்து, அதனை திறம்பட செய்து வருகிறார். தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். ஆனால் தோனி திடீரென விவசாயி ஆனதன் காரணம் என்ன?
IRE vs IND 1st T20: அயர்லாந்தை தட்டி தூக்கிய இந்தியா; கடைசில வான வேடிக்கை காட்டிய மெக்கர்த்தி!
ஒரு அரிய வீடியோ நேர்காணலில், கோவிட் -10 தொற்று நோய்களின் போது பயிர்களை விளைவிப்பதிலும், ஓய்வு நேரத்தைக் கழிப்பதிலும் அவருக்கு இருந்த விருப்பத்தை இரண்டு காரணங்களாக விளக்கினார். சிறுவயது முதலே விவசாயத்திற்கு மிக அருகாமையில் தான் இருந்தோம். இந்த விவசாயத்தை கோவிட் காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டோம். ஆனால், அப்போது, இருந்த 40 ஏக்கர் நிலத்தில் 4 முதல் 5 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்தோம்.
Ireland vs India 1st T20: முதல் ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்த பூம் பூம் பும்ரா!
கோவிட் காலத்தின் போது என்னிடமிருந்த நேரத்தை சரியான முறையில் செய்ய வேண்டும் என்று விரும்பி, முழு நேர விவசாயத்தில் நுழைந்தேன். ஒரு பயிரை வளர்க்கும் செயல்முறை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் கூறினார். இரவில் நீங்கள் பார்க்கும் ஒரு வெண்டைக்காய் (பெண் விரல்) அளவு சிறியது. ஆனால் மறுநாள் காலையில் அது முழு அளவில் வளர்ந்துள்ளது. இது போன்ற உற்பத்தி நிகழ்வுகள் விவசாயத்தில் மேலும் உற்சாகப்படுத்தியது.
நீண்ட நாட்களுக்கு முன்பு, தோனி தனது ஸ்ட்ராபெர்ரி பயிர்களின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில்,: "நான் தொடர்ந்து பண்ணைக்குச் சென்றால், சந்தைக்கு ஸ்ட்ராபெர்ரி எதுவும் இருக்காது" என்று குறிப்பிட்டிருந்தார்.