பாகிஸ்தான் அணியில் எத்தனை பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அவர்களை எதிர்கொள்ளும் சிறந்த பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் ஷதாப் கான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
ஸ்வராஜ் டிராக்டர்களின் பிராண்ட் அம்பாசிடராக தோனிக்கு வரவேற்பு- ஆனந்த் மஹிந்திரா!
ஆசிய கோப்பை 2023 தொடரின் கிரிக்கெட்டின் 3ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது: ஷாஹீன் அஃப்ரிடி சிறந்த பந்துவீச்சாளர் தான். ஒவ்வொரு அணியிலும் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று இருப்பார்கள். அதில் அஃப்ரிடியும் ஒருவர். நசீம் ஷாவும் ஒருவர்.
அதே போன்று தான் ஆஸ்திரேலிய அணியில், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் இருக்கிறார்கள். நியூசிலாந்து அணியில் வாக்னர், போல்ட்டும் இருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்ள இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இந்திய அணியில் உள்ள வீரர்களை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு வரையில் மாற்றவே கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
India vs Pakistan: இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!