WI vs IND: 3ஆவது ODIயிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் – ஷாய் ஹோப்!

Published : Jul 30, 2023, 03:27 PM IST
WI vs IND: 3ஆவது ODIயிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுவோம் – ஷாய் ஹோப்!

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் சுதாரித்துக் கொண்டு பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்தது.

WI vs IND: பாபர் அசாம் சாதனையை முறியடித்த கில்!

இதில், தொடக்க வீரர் இஷான் கிஷான் 52 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 34 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விமானத்தில் தூங்கியபடி வரும் தோனியை வீடியோ எடுத்த விமான பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!

கீச் கார்டி 48 ரன்கள் எடுத்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்றூ சமன் செய்தது. இதையடுத்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் கூறியிருப்பதாவது: இந்தியாவை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றவே விரும்புகிறோம்.

தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?

அணி வீரர்கள் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு தற்போது மீண்டு வந்து இந்திய அணியை வீழ்த்தியுள்ளோம். இதே போன்ற மன தைரியத்துடன் அடுத்த போட்டியிலும் விளையாட நினைக்கிறோம். 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்று சாதிப்போம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Asian Games 2023 QF, SF: காலிறுதி, அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!