WI vs IND: பாபர் அசாம் சாதனையை முறியடித்த கில்!

Published : Jul 30, 2023, 02:56 PM IST
WI vs IND: பாபர் அசாம் சாதனையை முறியடித்த கில்!

சுருக்கம்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒரு நாள் போட்டிகளில் எடுத்த ரன்கள் சாதனையை இந்திய கிரிக்கேட் வீரர் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விமானத்தில் தூங்கியபடி வரும் தோனியை வீடியோ எடுத்த விமான பணிப்பெண்: வைரலாகும் வீடியோ!

இதில், அதிகபட்சமாக இஷான் கிஷான் 52 ரன்கள் சேர்த்தார். சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தார். இது சுப்மன் கில்லின் 26ஆவது ஒரு நாள் போட்டி ஆகும். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 50ஆவது போட்டியில் விளையாடினார். இதில், 14 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் 2500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

தோனியின் மூத்த சகோதரி ஜெயந்தி குப்தா யாரை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா?

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாமின் சாதனையை முறியடித்துள்ளார். பாபர் அசாம், 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அவர் 1322 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், சுப்மன் கில் தனது 26ஆவது ஒரு நாள் போட்டியில் 34 ரன்கள் எடுத்ததன் மூலமாக 1352 ரன்கள் எடுத்து பாபர் அசாம் சாதனையை முறியடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் வெளியேறினார். முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்து 23 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்த நிலையில், 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Asian Games 2023 QF, SF: காலிறுதி, அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!

பின்னர், எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்பை உணர்ந்து விளையாடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரர் கீசி கார்டி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1 ஆம் தேதி டிரினிடாட்டில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!