வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்களில் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் புத்திச்சாலித்தனமாக பேட்டிங் செய்தது. ஆரம்பத்தில் அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பார்த்தபோது எப்படியும் 200 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழவே வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கேப்டன் ரோவ்மன் பவால் 48 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 41 ரன்கள் குவித்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.
முழு உடல் தகுதி பெறாத கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்: ஆசிய கோப்பை 2023 தொடரில் வாய்ப்பு வழங்கப்படுமா?
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் 3 ரன்னிலும், இஷான் கிஷான் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
WI vs IND 1st T20: இந்தியா பிளேயிங் 11ல் யாருக்கு வாய்ப்பு?
ஹர்திக் பாண்டியா 19, சஞ்சு சாம்சன் 12, அக்ஷர் படேல் 13, அர்ஷ்தீப் சிங் 12 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக இந்திய அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி 4 ரன்களில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக வெஸ்ட் இண்டிஸ் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியில் இஷான் கிஷான், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்ஷர் படேல், திலக் வர்மா என்று வரிசையாக பேட்ஸ்மேன்கள் இருந்தும் 149 ரன்கள் எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது அதிர்ச்சி அளிக்கிறது. வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க உள்ள நிலையில், இந்திய அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இடம் பெற வேண்டும்.
BCCI Media Rights: பிசிசிஐ மீடியா உரிமைக்கான ஏலத்தில் கூகுள், அமேசான் நிறுவனம்?