முழு உடல் தகுதி பெறாத கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர்: ஆசிய கோப்பை 2023 தொடரில் வாய்ப்பு வழங்கப்படுமா?

By Rsiva kumar  |  First Published Aug 3, 2023, 7:54 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இடம் பெறும் வாய்ப்பு மிக மிக குறைவு என்று கூறப்படுகிறது.


கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இதில், ஜஸ்ப்ரித் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் மூலமாக அணிக்கு திரும்பியுள்ளார். அதோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் அணிக்கு திரும்பியுள்ளார்.

WI vs IND 1st T20: இந்தியா பிளேயிங் 11ல் யாருக்கு வாய்ப்பு?

Tap to resize

Latest Videos

ஆனால், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து ஆசிய கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணி வீர்ரகள் சுழற்சி முறையில் அணியில் இடம் பெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடுவராக களமிறங்கும் வருமான வரித்துறை அதிகாரி: கோலியின் U19 WC வெற்றிக்கு காரணமாக இருந்த அஜிதேஷ் அர்கல்!

இந்திய அணியில் இஷான் கிஷான், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் களமிறங்கி சிறப்பாக விளையாடினர். மிடில் ஆர்டர் வரிசையில் சஞ்சு சாம்சன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு பக்க பலமாக சூர்யகுமார் யாதவ்வும் ரன்கள் சேர்த்து வருகிறார்.

BCCI Media Rights: பிசிசிஐ மீடியா உரிமைக்கான ஏலத்தில் கூகுள், அமேசான் நிறுவனம்?

இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலும் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ்விற்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மாறாக, கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தாலும் இன்னும் அவர்கள் முழு உடல் தகுதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர்கள் இடம் பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஓரங்கட்டப்படும் தமிழக வீரர் நடராஜன்: ஆசிய கோப்பை, ஆசிய விளையாட்டு, உலகக் கோப்பை எதிலும் வாய்ப்பில்லை!

click me!