விராட் கோலி ஆதரவு தரவில்லை என்றால் நான் அணிக்கு திரும்ப வந்திருக்க முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் யுவராஜ் சிங். இவர், 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900 ரன்களும், 10 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 304 போட்டிகளில் விளையாடி 8701 ரன்களும், 111 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதே போன்று 58 டி20 போட்டிகளில் விளையாடி 1177 ரன்களும், 29 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
உணவகம் வைத்திருக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!
யுவராஜ் சிங் இல்லையென்றால் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி டி20 மற்றும் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றிருக்காது. இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வந்த யுவராஜ் சிங்கிற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. என்னதால் டி20 போட்டிகளில் அவர் இடம் பெற்றிருந்தாலும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் அவர் கழற்றிவிடப்பட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ரஞ்சி டிராபியில் இடம் பெற்று தொடர்ந்து 3 சதங்கள் அடித்ததன் மூலமாக கூட அவரால் இந்திய அணிக்கு திரும்ப வர முடியவில்லை. கடைசியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று கிட்டத்தட்ட 7 மாதங்கள் மட்டுமே இடம் பெற்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
நீ விளையாடியது போதும்; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓரங்கட்டப்பட்ட புஜாரா!
ஆனால், தான் அணிக்கு திரும்ப வந்ததற்கு முக்கிய காரணமே விராட் கோலி தான். விராட் கோலி கேப்டனாக இருந்து தனக்கு ஆதரவு கொடுத்ததன் மூலமாகத்தான் இந்திய அணிக்கு தன்னால் திரும்ப வர முடிந்தது. விராட் கோலி மட்டும் இல்லையென்றால் தன்னால் இந்திய அணிக்கு திரும்ப வந்திருக்க முடியாது என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் கலையில் வித்தகராகும் சுரேஷ் ரெய்னா: ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா இந்திய உணகவம்!