உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் வீரர்கள் வெள்ளை நிற பந்துகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2 ஆவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்று 2ஆவது முறையும் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.
நீ விளையாடியது போதும்; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓரங்கட்டப்பட்ட புஜாரா!
இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் மற்றும் வரும் அக்டோபர் மாதம் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
சமையல் கலையில் வித்தகராகும் சுரேஷ் ரெய்னா: ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா இந்திய உணகவம்!
இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி தொடங்குகி ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடக்க இருக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடர்ந்து அடுத்து இந்தியா தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு தான்.
நடராஜன் கிரிக்கெட் மைதானம்: திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்; யோகி பாபு, புகழ் பங்கேற்பு!
முழுக்க முழுக்க வெள்ளை நிற பந்துகளில் தான் அவர்கள் விளையாட வேண்டும். அப்படியிருக்கும் போது ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ் என்று அனைவரும் சிவப்பு நிற பந்துகளில் மீண்டும் மீண்டும் விளையாடி வருகின்றனர்.
இவர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளிக்க வேண்டும். இவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களைக் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே முகேஷ் குமார், நவ்தீப் சைனி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு ஜூன் 30 கடைசி தேதி; அஜய் ராத்ரா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு!
இந்திய டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாத, ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.