நீ விளையாடியது போதும்; வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓரங்கட்டப்பட்ட புஜாரா!

By Rsiva kumar  |  First Published Jun 23, 2023, 8:46 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சட்டேஸ்வர் புஜாரா இடம் பெறவில்லை.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2 ஆவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்று 2ஆவது முறையும் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

சமையல் கலையில் வித்தகராகும் சுரேஷ் ரெய்னா: ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா இந்திய உணகவம்!

Tap to resize

Latest Videos

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னதாக இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சி மேற்கொண்டு வந்தவர் புஜாரா. அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை பழக்கப்படுத்திக் கொண்டார். அப்படியிருந்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 14 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் 27 ரன்னும் எடுத்தார்.

நடராஜன் கிரிக்கெட் மைதானம்: திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்; யோகி பாபு, புகழ் பங்கேற்பு!

டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வரும் புஜாரா தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் புஜாரா இடம் பெறவில்லை. இதுவரையில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா 7,195 ரன்கள் குவித்துள்ளார். இதில், 19 அரைசதமும், 35 சதமும் அடங்கும்.

தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு ஜூன் 30 கடைசி தேதி; அஜய் ராத்ரா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு!

இதே போன்று 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 51 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் மற்றும் அக்டோபர் மாதம் ஒரு நாள் உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!

இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த நிலையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாத, ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

click me!