பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஜிம் ஆஃப்ரோ டி10 லீக் தொடரில் இடம் பெறும் ஹராரே ஹரிஹேன் என்ற அணியின் உரிமையை பல கோடிக்கு வாங்கியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா போன்று தற்போது மாநிலம் முழுவதும் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக், டி20 பிளாஸ்ட், வங்கதேசம் பிரீமியர் லீக், ஹாங்காங் டி20 பிளிட்ஸ், சுப்பர் ஸ்மாஷ், லங்கா பிரீமியர் லீக், மேஜர் லீக் கிரிக்கெட், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், காஷ்மீர் பிரீமியர் லீக், ஸ்டான்பிக் பேங்க் 20 சீரிஸ் என்று அந்தந்த நாடுகளிலும் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்: டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
அந்த வகையில் ஜிம்பாப்வே கிரிக்கெட், டி டென் குளோபல் ஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து Zim Afro T10 லீக் தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி வரும் 29 ஆம் தேதி வரையில் நடக்கிறது. அனைத்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளம் மைதானத்தில் நடக்கிறது.
நடராஜன் கிரிக்கெட் மைதானம்: திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்; யோகி பாபு, புகழ் பங்கேற்பு!
இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏலம் மற்றும் போட்டிகள் அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அபுதாபியில் நடந்த டி10 தொடரின் 6 சீசன்களைத் தொடர்ந்து தற்போது டென் குளோபல் ஸ்போர்ட்ஸ் முதல் முறையாக ஜிம்பாப்வேயில் டி10 லீக்கை தொடங்குகிறது.
தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு ஜூன் 30 கடைசி தேதி; அஜய் ராத்ரா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு!
இந்த நிலையில், இதில் பங்கேற்கும் ஒரு அணியின் உரிமையை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பல கோடிக்கு வாங்கியுள்ளார். ஆம், ஹராரே ஹரிஹேன்ஸ் என்ற அணியின் உரிமையை வாங்கியுள்ளார். இந்த அணி தவிர டர்பன் கலாண்டர்ஸ், கேப் டவுன் சாம்ப் ஆர்மி, புலவாயோ பிரேவ்ஸ் மற்றும் ஜோபர்க் லயன்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!