வெஸ்ட் இண்டீஸ் தொடர்: டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Published : Jun 23, 2023, 03:22 PM ISTUpdated : Jun 23, 2023, 04:40 PM IST
வெஸ்ட் இண்டீஸ் தொடர்: டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2 ஆவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்று 2ஆவது முறையும் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது.

உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் மற்றும் வரும் அக்டோபர் மாதம் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 12 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜன் கிரிக்கெட் மைதானம்: திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்; யோகி பாபு, புகழ் பங்கேற்பு!

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாத, ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!