சேலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜனின் கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் இன்று திறந்து வைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் மூலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானவர் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன். அதன் பிறகு டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளும், 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளும், 4 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.
தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு ஜூன் 30 கடைசி தேதி; அஜய் ராத்ரா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு!
இது தவிர, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதுவரையில் ஐபிஎல் தொடர்களில் 47 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடும் அளவிற்கு இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.
டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!
❤️❤️❤️❤️ pic.twitter.com/0PXL2IuvKo
— Natarajan (@Natarajan_91)
இந்த நிலையில், தனது கிராமத்தில் இனிமேல் தன்னைப் போன்று கிரிக்கெட் ஆர்வம் கொண்ட இளம் வீரர்கள் யாரும் கஷ்டப்பக் கூடாது என்பதற்காக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார். சேலம், சின்னப்பம்பட்டியில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் (NATARAJAN CRICKET GROUND) ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று திறந்து வைத்துள்ளார்.
சுஜய் அதிரடி ஆட்டம்; லைகா கோவை கிங்ஸ் சிம்பிள் வெற்றி!
இதில், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, காமெடி நடிகர் யோகி பாபு, குக் வித் கோமாளி புகழ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!