தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு ஜூன் 30 கடைசி தேதி; அஜய் ராத்ரா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு!

By Rsiva kumar  |  First Published Jun 23, 2023, 11:50 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு விண்ணபிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி தேதி என்று அறிக்கப்பட்டுள்ளது.


இந்திய கிரிக்கெட்டின் உயர்மட்ட அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மூத்த ஆண்கள் தேர்வுக் குழு உறுப்பினருக்கான பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 30 ஆம் தேதி தான் கடைசி தேதி என்று அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பதவிக்கான அறிவிப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!

Tap to resize

Latest Videos

இந்த விண்ணப்பங்கள் மூலமாக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் நடத்தி தேர்வுக்குழு ஒரே ஒரு உறுப்பினரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தேர்வுக்குழு தலைவர் குறித்த பணிக்கு எதையும் குறிப்பிடவில்லை. ஆகையால், தற்போது தலைவராக உள்ள சிவசுந்தர் தாஸ் மீண்டும் தேர்வுக்குழு தலைவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர், 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1326 ரன்கள் குவித்துள்ளார். 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

சுஜய் அதிரடி ஆட்டம்; லைகா கோவை கிங்ஸ் சிம்பிள் வெற்றி!

ஒருவேளை இதில் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான அஜய் ராத்ரா தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால், சேத்தன் ஷர்மா மீண்டும் நியமிக்கப்பட்ட போது, கிரிக்கெட் ஆலோசனைக் குழுவானது ராத்ராவை நேர்காணல் செய்தது. அதன்படி மீண்டும் ராத்ரா நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் வீரர்களிடையே மோதல்: இந்திய பயிற்சியாளர் வெளியேற்றம்!

click me!