சமையல் கலையில் வித்தகராகும் சுரேஷ் ரெய்னா: ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா இந்திய உணகவம்!

By Rsiva kumar  |  First Published Jun 23, 2023, 6:55 PM IST

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். விரைவில் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.


கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. சின்ன தல என்று அழைக்கப்பட்டார். டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர், 226 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5615 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 36 அரைசதமும் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடினார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்று 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்கள் குவித்துள்ளார்.

நடராஜன் கிரிக்கெட் மைதானம்: திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்; யோகி பாபு, புகழ் பங்கேற்பு!

Tap to resize

Latest Videos

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, தற்போது இந்தியா லெஜெண்ட்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறார். இவ்வளவு ஏன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாட விண்ணப்பித்திருந்தார். ஆனால், இவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தான் அவர் ரெய்னா இந்திய உணவகம் என்ற பெயரில் இந்திய உணவக ஒன்றை திறக்க உள்ளார். அதுவும் இந்தியாவில் இல்லை, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இந்த உணகவம் உள்ளது. சினிமாவில் படம் வெளியாவதற்கு முன்னதாக டீசர், டிரைலர் வெளியாவதற்கு முன்னதாக ரெய்னா இந்திய உணவகத்தின் ஸ்னீக் பீக் புகைப்படங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.

தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு ஜூன் 30 கடைசி தேதி; அஜய் ராத்ரா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரெய்னா இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு உணவு மற்றும் சமையலில் அதிக ஆர்வம் இருப்பதை இந்த உணவகம் எடுத்துக்காட்டும். இந்த உணவகத்தில் ருசியான உணவு கிடைக்கும். விரைவில் இந்த உணவகத்தின் தொடக்க விழா நடக்க இருக்கிறது. அதற்காக என்னுடன் எனது சாகச பயணத்தில் இணைந்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

I am absolutely ecstatic to introduce Raina Indian Restaurant in Amsterdam, where my passion for food and cooking takes center stage! 🍽️ Over the years, you've seen my love for food and witnessed my culinary adventures, and now, I am on a mission to bring the most authentic and… pic.twitter.com/u5lGdZfcT4

— Suresh Raina🇮🇳 (@ImRaina)

இந்த உணவகத்தில் பிற்பகல் சாப்பாடு, இரவு உணவு வழங்கப்படும். மேலும், டேக் அவே வசதியும் உண்டு. அப்படி இந்த உணகவத்தில் என்ன சிறப்பு என்று கேட்டால், விளையாட்டு மற்றும் உணவு மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த உணவுகம் புதிய ஒரு அனுபவத்தை கொடுக்குமாம்.

நம்பிக்கையான உள்ளூர் வியாபாரிகளிடமிருந்து சுத்தமான, தரமான பொருட்களை பெற்றுக் கொண்டு அதன் மூலமாக தரமான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை இந்த நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், மாதம் முழுவதும் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுமாம்.

click me!