இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி கவுகாத்தியிலிருந்து திருவனந்தபுரம் செல்லாமல் அவர் மும்பைக்கு திரும்பியுள்ளார்.
கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்னதாக 10 அணிகளும் தலா 2 வார்ம் அப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது வார்ம் அப் போட்டியானது 30 ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால், டாஸ் மட்டுமே போடப்பட்ட நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியானது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 9ஆவது வார்ம் அப் போட்டியானது நாளை திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
World Cup 2023: உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்?
இதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று கவுகாத்தியிலிருந்து திருவனந்தபுரம் வந்தனர். ஆனால், விராட் கோலி மட்டும் திருவனந்தபுரம் வரவில்லை. மாறாக, அவர் கவுகாத்தியிலிருந்து அவரச அவசரமாக மும்பைக்கு திரும்பியுள்ளார். என்ன காரணம், எதற்காக அவர் மும்பை திரும்பினார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்பு விராட் கோலியின் மனைவி 2ஆவது முறையாக கர்ப்பமாக இருப்பதாகவும், விராட் கோலி 2ஆவது முறையாக அப்பாவாக போவதாகவும் தகவல் வெளியானது.
ஒரு வேளை இது உண்மையாக இருந்து, தனது மனைவியை பார்ப்பதற்காகத்தான் விராட் கோலி மும்பை சென்றிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும், அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது குறித்து முறையான அறிவிப்பு வெளிவரவில்லை. விராட் கோலி மும்பை சென்றுள்ள நிலையில், நாளை நடக்க உள்ள நெதர்லாந்து அணிக்கு எதிரான 9 ஆவது வார்ம் அப் போட்டியில் இடம் பெறப்போவதில்லை என்று கூறப்படுகிறது.
World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?
வரும் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் முதல் போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அதோடு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியானது 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.