IPL 2023: ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 அரை சதங்கள் அடித்த ஷிகர் தவானை முந்திய கிங் விராட் கோலி!

By Rsiva kumar  |  First Published Apr 3, 2023, 10:53 AM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 82 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 முறை அரை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
 


ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகளும் தற்போது ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியுள்ளன. நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த 5ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷான் 10, கேமரூன் க்ரீன் 5, ரோகித் சர்மா 1, சூர்யகுமார் யாதவ் 15, நேஹல் வதேரா 21  என்று வரிசையாக ஒவ்வொரு வீரரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

IPL 2023: வாரி வழங்கிய இம்பேக்ட் பிளேயர்ஸ்: சென்னையின் துஷார் தேஷ்பாண்டே மோசமான சாதனை!

Tap to resize

Latest Videos

எனினும், தனி ஒருவனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்றுக் கொடுத்தது திலக் வர்மா தான். ஆம், கடைசி வரையில் போராடி 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 84 (நாட் அவுட்) ரன்கள் குவித்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர்களான பாப் டூபிளசிஸ், விராட் கோலி இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.

IPL 2023 RCB: தோள்பட்டையை பிடித்துக் கொண்டு வெளியேறிய ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்ளி!

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பிளசிஸ் 43 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் டக் அவுட்டில் வெளியேறினார். பின்னர், வந்த மேக்ஸ்வேல் - விராட் கோலி இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர் மேக்ஸ்வெல் 12 ரன்னுடனும், விராட் கோலி 82 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில் விராட் கோலி 50 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 முறை அரை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

IPL 2023: ரோகித் சர்மாவின் கேட்சை பிடிக்க போய் மோதிக் கொண்ட தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ்!

ஆனால், டேவிட் வார்னர் இதுவரையில் 60 முறையில் அரை சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். 2ஆவது இடத்தில் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி 49 அரை சதங்கள் உடன் 2ஆவது இடத்தில் இருந்தனர். நேற்றைய போட்டியில் அரை சதங்கள் அடித்ததன் மூலம் 50 அரை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஷிகர் தவான் 49 அரை சதங்கள் உடன் 3ஆவது இடம் பிடித்தார். ஏபி டிவிலியர்ஸ் 43 அரை சதங்கள் உடன் 4ஆவது இடத்திலும், ரோகித் சர்மா 41 அரை சதங்கள் உடன் 5ஆவது இடத்தில் உள்ளார்.

IPL 2023: ஐபிஎல்லில் இவர்கள் தான் கிங்: ஆர்சிபிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 19 வெற்றி!

click me!