நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

By Rsiva kumarFirst Published Jan 17, 2023, 3:10 PM IST
Highlights

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடக்க உள்ள நிலையில், இரு அணி வீரர்களும் ஹைதராபாத் வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
 

இலங்கை தொடரை வெற்றியோடு முடித்த கையோடு இந்திய அணி வீரர்கள் ஹைதராபாத்திற்கு வந்துள்ளனர். அதே போன்று நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் தொடரை வெற்றியோடு முடித்த கையோடு இந்தியா வந்துள்ளனர். இரு அணிகளுமே வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SA20: முதல் வெற்றியை பதிவு செய்த சன்ரைசரஸ் ஈஸ்டர்ன் கேப்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அது என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க....

நியூசிலாந்துக்கு எதிரான இதுவரையில் விராட் கோலி 26 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 3 முறை அவுட்டே ஆகவில்லை. மொத்தமாக 1378 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 154 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 8 முறை அரைசதம் எடுத்துள்ளார். அதே போன்று 5 முறை சதம் அடித்துள்ளார்.

மொத்தமாக 123 பவுண்டரிகளும், 19 சிக்சர்களும் விளாசியுள்ளார். ஒரு நாள் போட்டியில் பேட்டிங் ஆவரேஜ் 59.91. அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டியில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 94.64

5 டன் மணல், 5000 ஹாக்கி பந்துகள் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஹாக்கி ஸ்டிக் புதிய உலக சாதனை!

நியூசிலாந்துக்கு எதிராக....

  1. ஒரு நாள் போட்டி - 26
  2. நாட் அவுட் - 3
  3. ஒரு நாள் போட்டியில் ரன்கள் - 1378
  4. அதிகபட்சமாக - 154 ரன்கள் நாட் அவுட்
  5. அரைசதம் - 8 முறை
  6. சதம் - 5 முறை
  7. பவுண்டர்கள் - 123
  8. சிக்சர்கள் - 19
  9. ஒரு நாள் போட்டி பேட்டிங் ஆவரேஜ் - 59.91
  10. ஒரு நாள் போட்டியில் ஸ்ட்ரைக் ரேட் - 94.64

டீம் மேட்டின் காதலியுடன் ஆபாசமாக பேசும் பாபர் அசாம்: சர்ச்சையான வீடியோ!

இதே போன்று இந்திய அணியும் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரையில் 113 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 55 ஒரு நாள் போட்டியிலும், நியூசிலாந்து அணி 50 ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. 7 போட்டிகளுக்கு முடிவு இல்லாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Hockey World Cup 2023: டிராவில் முடிந்த அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா போட்டி!

click me!