சச்சின் டெண்டுல்கர் 100 சத சாதனையை முறியடிக்க கோலி என்ன செய்யணும்..? கவாஸ்கர் அதிரடி ஆலோசனை

By karthikeyan V  |  First Published Jan 17, 2023, 3:08 PM IST

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை முறியடிக்க விராட் கோலி என்ன செய்ய வேண்டுமென்று சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
 


சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019 இறுதியிலிருந்து 2022 செப்டம்பர் வரையிலான 3 ஆண்டுகள் ஒரு சதம் கூட அடிக்காமல் திணறிவந்தார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து மீண்டும் தனது சத கணக்கை தொடங்கிய விராட் கோலி, அதன்பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்து கடந்த ஆண்டை சதத்துடன் முடித்தார்.

அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து 2023ம் ஆண்டை சதத்துடன் தொடங்கிய கோலி, இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் அபார சதமடித்து இந்திய அணி தொடரை வெல்ல உதவினார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 46வது சதம் அது. சர்வதேச கிரிக்கெட்டில் 74வது சதம்.

Tap to resize

Latest Videos

IND vs NZ: ஒருநாள் தொடரிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் விலகல்..! மாற்று வீரர் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள், டெஸ்ட்டில் 27 சதங்கள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் என மொத்தம் 74 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதங்கள்) அடுத்து 2ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.

ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இன்னும் 4 சதங்கள் அடித்தால் விராட் கோலி முறியடித்துவிடுவார். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பாரா என்பதுதான் பெரும் கேள்வியாகவும் விவாதமாகவும் உள்ளது.

74 சதங்கள் அடித்துள்ள கோலி, இன்னும் 27 சதங்கள் அடித்தால்  சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துவிடுவார். இதுதொடர்பாக விவாதங்கள் நடந்துவரும் நிலையில், கவாஸ்கர் இதுகுறித்து கருத்து கூறியுள்ளார்.

டான் பிராட்மேனுக்கு நிகரான சாதனைக்கு சொந்தக்காரர் சர்ஃபராஸ் கான்! இந்தியஅணி நிர்வாகத்தை விளாசிய முன்னாள் வீரர்

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், விராட் கோலி இன்னும் 5-6 ஆண்டுகள் ஆடினால் 100 சதங்களை விளாசிவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் 5-6 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுக்கு 6-7 சதங்கள் வீதம் விட்ளாசினால் விராட் கோலி 100 சதங்களை எட்டிவிடுவார். ஆனால் அதற்கு அவர் 40 வயது வரை ஆடவேண்டும். சச்சின் டெண்டுல்கரும் கூட 40 வயது வரை ஆடித்தான் 100 சதங்கள் விளாசினார். விராட் கோலி இளம் வீரர்களுக்கே சவால் விடும் அளவிற்கு ஃபிட்னெஸுடன் இருக்கிறார். எனவே 40 வயது வரை அவரால் கண்டிப்பாக ஆடமுடியும். அப்படி ஆடினால் சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை முறியடிக்கலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

click me!