IPL 2023: விராட் கோலிக்கு தடை..? பீதியில் ஆர்சிபி

By karthikeyan V  |  First Published Apr 25, 2023, 6:35 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் இன்னுமொரு போட்டியில் ஆர்சிபி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் ஸ்டாண்டிங் கேப்டன் விராட் கோலிக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஆடிவரும் ஆர்சிபி அணி, இதுவரை சிறப்பாக ஆடி 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.

2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் தலா  7 போட்டிகளில் 4 வெற்றிகளைத்தான் பெற்றுள்ளன. ஆனால் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அந்த அணிகள் மேலே இருக்கின்றன. ஆர்சிபி அணி சற்று கீழே இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

இந்த சீசனில் ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது. ஆனால் அந்த அணி ஃபாஃப் டுப்ளெசிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் ஆகிய 4 வீரர்களைத்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. அவர்களில் இருவராவது ஜொலித்தால் தான் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புள்ளது. அவர்கள் சொதப்பினால் படுதோல்வி அடைகிறது.

ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணி ஓர் அலசல்..! சாரி ராகுல் உங்களுக்கு இடம் இல்ல..! உத்தேச ஆடும் லெவன்

இந்த சீசனில் ஃபாஃப் டுப்ளெசிஸ் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து, இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். கோலி மற்றும் மேக்ஸ்வெல்லும் நல்ல ஃபார்மில் ஆடிவருகின்றனர். 

கடைசி 2 போட்டிகளில் ஃபாஃப் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே ஆடினார். அதனால் விராட் கோலி தான் கேப்டன்சி செய்துவருகிறார். கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி தான் ஆர்சிபி அணியை வழிநடத்தினார். இந்த 2 போட்டிகளிலுமே ஆர்சிபி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது.

IPL 2023: செம சோம்பேறிங்க அவன்.. டீமை விட்டு தூக்கியது சரிதான்.! பிரித்வி ஷாவை செமயா விளாசிய முன்னாள் வீரர்

ஐபிஎல் விதிப்படி, முதல் முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதமும், 2வது முறை ரூ.24 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அந்தவகையில், விராட் கோலிக்கு முதல்முறை ரூ.12 லட்சம் அபராதமும், 2வது முறை ரூ.24 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுவிட்டது. இன்னுமொரு முறை ஆர்சிபி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்தால், விராட் கோலிக்கு ரூ.30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டியில் ஆடுவதற்கு தடையும் விதிக்கப்படலாம்.
 

click me!