ஐபிஎல் 16வது சீசனின் பிற்பாதியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஆடிவரும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் லக்னோ அணி நன்றாக ஆடிவரும் நிலையில், அந்த அணிக்கு பின்னடைவாக அமையக்கூடிய செய்தி கிடைத்துள்ளது.
ICC WTC ஃபைனலுக்கான இந்திய அணி ஓர் அலசல்..! சாரி ராகுல் உங்களுக்கு இடம் இல்ல..! உத்தேச ஆடும் லெவன்
அந்த அணியில் ஆடிவரும் இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலரான மார்க் உட், இந்த சீசனின் பிற்பாதியில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளதால் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் அவர் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவார் என்று தெரிகிறது.
மே மாத இறுதியில் குழந்தை பிறப்புக்கான தேதி கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் மே 28ம் தேதி முடிவடைகிறது. 23ம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகள் நடக்கின்றன. லக்னோ அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிடும் என்று தெரிகிறது. அப்படி பிளே ஆஃபிற்கு முன்னேறும்பட்சத்தில் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மார்க் உட் ஆடவில்லை என்றால் அது கண்டிப்பாக பெரும் பின்னடைவாக அமையும்.
இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார் மார்க் உட்.