ICC WTC ஃபைனல்: தரமான இந்திய அணி தேர்வு.. டீம் செமயா இருக்கு.. தேர்வாளர்களை மனதார பாராட்டிய ரவி சாஸ்திரி

By karthikeyan V  |  First Published Apr 25, 2023, 3:45 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு மிகச்சிறந்த இந்திய அணியை தேர்வு செய்திருப்பதாக தேர்வாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.
 


ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ம் தேதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தொடங்குகிறது. 

ஃபைனலுக்கான ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி இந்த முறை ஃபைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

Latest Videos

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கில், புஜரா, கோலி, ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். அஜிங்க்யா ரஹானே டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட பின் 5ம் வரிசை வீரராக ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவர் ஃபைனலுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதற்கிடையே ஐபிஎல்லில் அபாரமாக ஆடி சாதனை இன்னிங்ஸ்களை ஆடி, தனது கெரியரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை அஜிங்க்யா ரஹானே வெளிப்படுத்த, அதன்விளைவாக ரஹானே ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

IPL 2023: GT vs MI பலப்பரீட்சை..! ரஷீத் கானை சமாளிப்பாரா ரோஹித் சர்மா..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் இங்கிலாந்தில் நடக்கிறது. ரஹானே பொதுவாக வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக ஆடக்கூடியவர். வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார். அதன்விளைவாக, அவர் அணிக்கு வலுசேர்ப்பார்; மிடில் ஆர்டரில் நல்ல பேலன்ஸை கொடுப்பார் என்பதால் அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் இல்லை. விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் ஆடுகிறார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் விக்கெட் கீப்பிங் நன்றாக செய்தார். விக்கெட் கீப்பிங்கில் நம்பிக்கையளித்தாலும், பரத்தை பேட்டிங்கில் பெரிதாக நம்ப முடியாது. ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் ஏற்கனவே சதமடித்து அசத்தியிருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடக்கும் இதே லண்டன் ஓவலில் 2018ல் சதமடித்திருக்கிறார் ரிஷப் பண்ட். எனவே ரிஷப் பண்ட் இல்லாதது பின்வரிசை பேட்டிங்கில் கண்டிப்பாகவே பின்னடைவாக அமையும். ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் ஆடி ஒருசில ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதுமாதிரியான ஆட்டத்தை திருப்பும் இன்னிங்ஸ்களை பலமுறை பார்த்திருக்கிறோம். 

ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கத் ஆகியோருடன் ஷர்துல் தாகூரும் எடுக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கத். 

ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய 3 முக்கியமான வீரர்கள் இல்லாதபோதிலும், மிகச்சிறந்த, நல்ல பேலன்ஸான, வலுவான இந்திய அணியை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ள நிலையில், மிகச்சிறந்த அணியை தேர்வு செய்திருப்பதாக தேர்வாளர்களை பாராட்டியுள்ளார் ரவி சாஸ்திரி.

IPL 2023: செம சோம்பேறிங்க அவன்.. டீமை விட்டு தூக்கியது சரிதான்.! பிரித்வி ஷாவை செமயா விளாசிய முன்னாள் வீரர்

இந்திய அணி தேர்வு குறித்து டுவீட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மிகச்சிறந்த இந்திய அணியை தேர்வு செய்துள்ளீர்கள். தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள் என்று டுவீட் செய்துள்ளார் ரவி சாஸ்திரி.
 

Best Indian team selected. Well done selectors and team management 🇮🇳 pic.twitter.com/olIK46GO96

— Ravi Shastri (@RaviShastriOfc)
click me!