ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 1258 நாட்கள் வரையில் இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருந்திருக்கிறார்.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும், 10 நாட்களில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதி வாய்ப்புகளை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
நாங்க தான் எல்லாம்: ஆல் இன் ஆல் அழகுராஜாவாக திகழும் இந்தியா நம்பர் 1!
தற்போது 4ஆவது இடத்திற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரையில் நடந்த 6 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 16, 53, 26, 9, 92, 23 என்று மொத்தமாக 219 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளையாடிய 8 போட்டிகளில் மொத்தமாக 282 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் ஐசிசி வெளியிட்ட ஆண்களுக்கான ஒரு நாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் பாபர் அசாம் 824 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
England vs Netherlands: கடைசி வாய்ப்பையும் இழந்த நெதர்லாந்து – 4ஆவது அணியாக வெளியேற்றம்!
கடந்த 951 நாட்களாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் ஒரு இடம் சரிந்து 2ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் தான் இந்திய அணியின் இளவரசர் என்று சொல்லப்படும் சுப்மன் கில் 830 புள்ளிகள் உடன் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். விராட் கோலி 770 புள்ளிகள் உடன் 4ஆவது இடமும், ரோகித் சர்மா 739 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
மொயீன் அலி, ஆடில் ரஷீத் சுழலில் 179 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து – இங்கிலாந்து 6ஆவது இடம்!
ஒரு நாள் போட்டி ஐசிசி பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 1258 நாட்கள் வரையில் நம்பர் 1 இடத்தில் இருந்திருக்கிறார். அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1748 நாட்கள் வரையில் நம்பர் 1 இடத்தில் இருந்திருக்கிறார். இதே போன்று ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் பெவன் 1259 நாட்கள் நம்பர் 1 இடத்தில் இருந்திருக்கிறார். பாபர் அசாம் 951 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது சும்பன் கில் நம்பர் 1 இடத்தில் இருந்திருக்கிறார்.
England vs Netherlands: முதல் முறையாக உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்!
மேலும், இன்னிங்ஸ் அடிப்படையில் எம்எஸ் தோனிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 2வது வேகமான வீரர் சுப்மன் கில் ஆவார். இதற்கு முன்னதாக ஒரு நாள் போட்டிகளில் நம்பர் 1 இடம் பிடித்த இந்திய வீரர்களின் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தற்போது அவர்களது வரிசையில் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார்.
இதே போன்று பவுலிங்கில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 709 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 661 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், ஜஸ்ப்ரித்ட் பும்ரா 654 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.