இங்கிலாந்திற்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து 4ஆவது அணியாக வெளியேறியது.
இந்தியாவின் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்து அரையிறுதி போட்டிக்கு சென்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
மொயீன் அலி, ஆடில் ரஷீத் சுழலில் 179 ரன்களில் சுருண்ட நெதர்லாந்து – இங்கிலாந்து 6ஆவது இடம்!
தற்போது 4 ஆவது இடத்திற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் போட்டி போடுகின்றன. இதில், 4ஆவது அணியாக நெதர்லாந்திற்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால், நேற்று இங்கிலாந்திற்கு எதிராக நடந்த 40ஆவது உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலமாக பரிதாபமாக 4ஆவது அணியாக வெளியேறியுள்ளது.
England vs Netherlands: முதல் முறையாக உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்!
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் அபாரமான சதம் மற்றும் கிறிஸ் வோக்ஸின் அரைசதத்தால் இங்கிலாந்து 339 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நெதர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 41 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக நெதரலாந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து 4ஆவது அணியாக வெளியேறியது.
இதற்கு முன்னதாக வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நடக்க இருக்கிறது.