IPL 2023: கோலி, லோம்ரோர் அதிரடி அரைசதம்.. டெல்லி கேபிடள்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி

By karthikeyan V  |  First Published May 6, 2023, 9:33 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 181 ரன்கள் அடித்து 182 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்தது.
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. டெல்லியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி:

Latest Videos

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, கரன் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது. 

IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி - ஃபாஃப் டுப்ளெசிஸ் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். டுப்ளெசிஸ் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த விராட் கோலி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் தனது 50வது அரைசதத்தை அடித்த கோலி, ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் என்ற மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. டேவிட் வார்னர் தான் முதலில் 50 அரைசதங்கள் அடித்தவர். வார்னர் இதுவரை 59 அரைசதங்கள் அடித்துள்ளார்.

மேக்ஸ்வெல் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். கோலி ஆட்டமிழந்தபின் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து அபாரமாக பேட்டிங் ஆடிய மஹிபால் லோம்ரோர் ஐபிஎல்லில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். 29 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்களை விளாசி கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.

IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா

20 ஓவரில் 181 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 182 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. டெல்லி மைதானத்தில் இதுவே கடினமான இலக்குதான்.

click me!