டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. 14 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், 13 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி 2ம் இடத்திலும் உள்ளன. லக்னோ அணி 11 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. தலா 10 புள்ளிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே, லக்னோ, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆஃபிற்கான ரேஸில் உள்ளன.
இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இரவு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணியை விட, பிளே ஆஃபிற்கான ரேஸில் இருக்கும் ஆர்சிபி அணிக்குத்தான் இந்த போட்டியில் வெற்றி மிக முக்கியம்.
IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
டெல்லியில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் 38 வயதான கேதர் ஜாதவ் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல்லில் ஆட வாய்ப்பு பெற்றுள்ளார்.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் அன்ரிக் நோர்க்யா, பிரியம் கர்க்குக்கு பதிலாக ரைலீ ரூசோ மற்றும் முகேஷ் குமார் ஆடுகின்றனர்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, கரன் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, அக்ஸர் படேல், அமான் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.