Virat Kohli New House: 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் பணியை தொடங்கிய விராத் கோலி அனுஷ்கா சர்மா!

Published : Aug 15, 2023, 09:55 AM IST
Virat Kohli New House: 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் பணியை தொடங்கிய விராத் கோலி அனுஷ்கா சர்மா!

சுருக்கம்

மும்பையில் அலிபாக் பகுதியில் தங்களுக்கு சொந்தமான 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் பணியை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் தொடங்கியுள்ளனர்.

கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். இவரது நிகர ஆண்டு வருமானம் மட்டும் ரூ.1050 கோடி ஆகும். முதலீடுகள், பிராண்ட் அம்பாஸிடர்கள், சொத்துக்கள், கிரிக்கெட், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் மூலமாக கோடிக்கணக்கில் வருமானம் பெறுகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி இன்னும் ஓரிரு வாரங்களில் ஆசியக் கோப்பைக்கான கேம்பில் இணைய உள்ளார்.

50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்ற கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் – கண்காணித்த ரிஷப் பண்ட்!

இந்த நிலையில் தான் மும்பையில் உள்ள கடற்கரை பகுதியான அலிபாக் என்ற இடத்தில் தான் வாங்கி வைத்திருந்த 8 ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு கட்டும் பணியை தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து தொடங்கியுள்ளார்.

Twitter Display Picture: டுவிட்டர் டிபியை மாற்றாத தோனி, கோலி!

அலிபாக் பகுதியில் 2.54 ஏக்கர் மற்றும் 4.91 ஏக்கர் நிலத்தைச் சுமார், 19.24 கோடி ரூபாய் முதலீடு செய்து விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி வாங்கியுள்ளனர். மும்பையின் பணக்காரர்களிடையே பிரபலமானதாக விளங்கும் இந்த அலிபாக் பகுதியானது தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் என்று பிரபலங்களின் புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது.

அதிகாரப்பூர்வமான ப்ளூ டிக் மார்க்கை இழந்த பிசிசிஐ: என்ன காரணம் தெரியுமா?

ஏற்கனவே விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி, அலிபாக்கின் ஜிராத் கிராமத்திலுள்ள 8 ஏக்கர் நிலத்திற்கான ஒப்பந்தத்தை அவர்களது பெயரில் ரூ.1.15 கோடிக்கு முடித்துள்ளார். இந்த நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபரான சமீரா ஹேபிடேட்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருந்தனர். அந்த இடத்தில் பண்ணை வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணியை தொடங்கியுள்ளனர்.

Ravindra Jadeja Statue Pictures: சிலையோடு சிலையாக போஸ் கொடுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் புகைப்படம்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!