
அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாக வதந்தி பரவி வந்தது. இதனை தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும், விராட் கோலியின் நண்பருமான ஏபி டி விலியர்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த ஆண்டு தங்களது 2ஆவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று டிவிலியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
டிவிலியர்ஸ் தன்னை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களுடன் கேள்வி பதில் உரையாடல் நிகழ்த்தினார். அதில், ஒருவர் விராட் கோலியைப் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது தான் டிவிலியர்ஸ், விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினர் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். நான் கோலிக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போது தான் இதனை அறிந்து கொண்டேன். என்னால், அதிகளவில் எந்த செய்தியும் தர முடியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் அவர் நலமாக இருக்கிறார். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறாததற்கு இதுதான் காரணம்.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இடம் பெறாததற்கும் இதுதான் காரணம். கிரிக்கெட் மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு எப்போ பார்த்தாலும் விராட் கோலி தனிப்பட்ட காரணம் என்று கூறி வீட்டிற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இது ஏன் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், தான் அதற்கான காரணம் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
Sri Lanka vs Afghanistan Test: இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நிறுத்தம்: ஏன் தெரியுமா?
ஏபி டிவிலியர்ஸ் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கூறினாலும், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி தம்பதியினருக்கு ஏற்கனவே வாமிகா என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் இந்தியா அண்டர் 19 – வெற்றிக்கு வித்திட்ட உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே!