இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா வேத்தில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்தியா 396 ரன்கள் குவித்தது. இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் விளையாடியது.
இதில், குல்தீப் யாதவ் சுழலில் பென் டக்கெட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து நிதானமாக விளையாடிய ஜாக் கிராவ்லி அக்ஷர் படேல் சுழலில் சிக்கி கொண்டார். அவர் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து வந்த ரூட் 5 ரன்களில் பும்ரா வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் அதிர்ச்சியுடன் திரும்பினார்.
Sri Lanka vs Afghanistan Test: இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி நிறுத்தம்: ஏன் தெரியுமா?
இதே போன்று ஆலி போப் 23 ரன்களில், பும்ராவின் யார்க்கருக்கு கிளீன் போல்டார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவும் பும்ராவின் வேகத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் பென் ஃபோக்ஸ் 6 ரன்னிலும், ரெஹான் அகமது 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடி வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பும்ரா வேகத்திற்கு கிளீன் போல்டானார். அவர் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 13 ஆவது முறையாக பும்ரா பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.
அரையிறுதியில் இந்தியா அண்டர் 19 – வெற்றிக்கு வித்திட்ட உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே!
மேலும், டாம் ஹார்ட்லியும் 21 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 ரன்னில் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக பும்ரா இந்தப் போட்டியில் 15.5 ஓவர்களில் 5 மெய்டன் உள்பட 45 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இறுதியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.