நம்ப வச்சு ஏமாத்திய நண்பன்: நிலம் வாங்கித் தருவதாக கூறிய நண்பனிடம் ரூ.44 லட்சம் ஏமாந்த உமேஷ் யாதவ்!

By Rsiva kumarFirst Published Jan 22, 2023, 9:39 AM IST
Highlights

வேலையில்லாத நண்பனுக்கு வேலை கொடுத்து மேனேஜர் பொறுப்பும் கொடுத்து தன்னோடு வைத்திருந்த நிலையில் அவர் மூலமாக ரூ.44 லட்சம் ஏமாந்து தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வசித்து வரும் உமேஷ் யாதவ் தற்போது நாக்பூர் அருகிலுள்ள கோரடி காவல் நிலையத்தில் தனது நண்பர் ரூ.44 லட்சம் பணத்தை ஏமாற்றியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

ராய்ப்பூரில் நடு ஹோட்டலில் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய விராட் கோலி, சிராஜ்!

இந்த புகார் குறித்து போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். அந்த முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: உமேஷ் யாதவ்வின் நண்பர் சைலேஷ் தாக்கரே (37) நீண்ட காலமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அவருக்கு வேலையும் கொடுத்து மேனேஜர் பொறுப்பும் கொடுத்துள்ளார்.

IND vs NZ 2nd ODI: ராய்ப்பூரில் மண்ணைக் கவ்விய நியூசிலாந்து: இந்தியா வெற்றி: 2-0 என்று தொடரையும் கைப்பற்றியது!

ஆரம்பத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்த ஷைலேஷ் தாக்கரே, உமேஷ் யாதவ்வின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இதனால், உமேஷ் யாதவ் தனது வங்கிக் கணக்கு, வருமான வரி உள்ளிட்ட அனைத்து வரவு, செலவு கணக்குகளை பார்க்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். அதன் பிறகு உமேஷ் யாதவ்வின் அனைத்து வரவு, செலவு கணக்குகளையும் தாக்கரே தான் பார்த்து வந்துள்ளார்.

எங்கிருந்தோ ஓடி வந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன்: அலேக்காக தூக்கிச் சென்ற பாதுகாவலர்!

நாக்பூர் பகுதியில் உமேஷ் யாதவ் சொந்தமாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இது தொடர்பாக சைலேஷ் தாக்கரேயிடமும் பேசியிருக்கிறார். தரிசு பகுதியில் ஒரு இடம் வாங்கலாம். அதனுடைய மதிப்பு ரூ.44 லட்சம் என்று தாக்கரே சொல்லியிருக்கிறார். இதற்காக ரூ.44 லட்சத்தை தாக்கரேயின் வங்கிக் கணக்கில் உமேஷ் யாதவ் செலுத்தியிருக்கிறார். ஆனால், தாக்கரே தனது பெயரில் அந்த நிலத்தை பதிவு செய்துள்ளார்.

மகளின் திருமணம்- வீட்டை அலங்கரித்த சுனில் ஷெட்டி: கண்டாலாவில் நடக்கும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!

இது குறித்து உமேஷ் யாதவ்விற்கு தெரியவரவே, அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி கேட்டுள்ளார். ஆனால், தாக்கரே மறுப்பு தெரிவிக்கவே, தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த உமேஷ் யாதவ், நாக்பூர் பகுதியில் உள்ள கோரடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியாவிடம் சரண்டரான நியூசிலாந்து: 108க்கு ஆல் அவுட்!

இதையடுத்து, நம்பிக்கை மீறலுக்கான குற்றவியல் தண்டனை தடுப்புச் சட்டம் பிரிவு 406 மற்றும் ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து வாங்குதல் தடுப்புச் சட்டம் பிரிவி 420 ஆகிய ஐபிசி பிரிவுகளின் கீழ் சைலேஷ் தாக்கரே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இதுவரையில் எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியமா ஒன்னும் தெரியல: மறந்தே போச்சு: டாஸில் ஜெயிச்ச ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே பதில்

click me!