IND vs NZ 2nd ODI: ராய்ப்பூரில் மண்ணைக் கவ்விய நியூசிலாந்து: இந்தியா வெற்றி: 2-0 என்று தொடரையும் கைப்பற்றியது!

By Rsiva kumarFirst Published Jan 21, 2023, 6:54 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூரில் இன்று நடந்தது. இரு அணிகளும் முதல் முறையாக இந்த மைதானத்தில் மோதின. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமா? அல்லது பௌலிங்கிற்கு சாதகமா என்பது குறித்து எதுவும் தெரியாது. டாஸ் ஜெயிக்கும் அணியே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று ஏற்கனவே ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே இந்தியா அணி டாஸ் வென்று வெற்றியும் பெற்றுள்ளது.

எங்கிருந்தோ ஓடி வந்து ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்த சிறுவன்: அலேக்காக தூக்கிச் சென்ற பாதுகாவலர்!

டாஸ் வென்ற ரோகித் சர்மா என்ன கேட்க வேண்டும் என்பதை மறந்து சிறிது நேரம் கழித்து பௌலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் ஓவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்து மோசமான சாதனை படைத்தது. 

இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் மற்ற அணிகள்:

இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே நீ 5 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.

இதே போன்று கடந்த 1997 ஆம் ஆண்டு கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளின் திருமணம்- வீட்டை அலங்கரித்த சுனில் ஷெட்டி: கண்டாலாவில் நடக்கும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!

இதே போன்று நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழந்து எடுத்த ரன்கள்

2023- இந்தியாவிற்கு எதிராக ராய்ப்பூரில் நடந்த போட்டியில் 15/5
2001- இலங்கைக்கு எதிராக கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் 18/5
2010- வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நடந்த போட்டியில் 20/5
2003- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபரிதாபாத்தில் நடந்த போட்டியில் 21/5

முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியாவிடம் சரண்டரான நியூசிலாந்து: 108க்கு ஆல் அவுட்!

இறுதியாக 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.  பந்து வீச்சில் முகமது ஷமி 6 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 3 விக்கெட் எடுத்து 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 6 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் உள்பட 2 விக்கெட் கைப்பற்றி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தார். முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீ யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

சத்தியமா ஒன்னும் தெரியல: மறந்தே போச்சு: டாஸில் ஜெயிச்ச ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே பதில்

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலியும் 11 ரன்களில் ஸ்டெம்பிங் முறையில் வெளியேறினார். ஒருபுறம் நிதானமாக ஆடிய சுப்மன் கில் 52 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த போது வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இஷான் கிஷான் 8 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 24 ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!