இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியா வந்து முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் என்ன கேட்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து பீல்டிங் தேர்வு செய்தார். இது சமூக வலைதளங்களில் மீம்ஸ் உருவாக காரணமாயிற்று.
சத்தியமா ஒன்னும் தெரியல: மறந்தே போச்சு: டாஸில் ஜெயிச்ச ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே பதில்!
இதையடுத்து முதலில் ஆடிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி ஓவரில் பின் ஆலென் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிராஜ் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், டேரில் மிட்செல் (1), டெவோன் கான்வே (7), டாம் லாதம் (1) என்று வரிசையாக வெளியேறினர். நியூசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் சீசன் முழுவதும் ரிஷப் பண்ட் அணிக்கு தேவை - ரிக்கி பாண்டிங்!
இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் மற்ற அணிகள்:
இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே நீ 5 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.
இதே போன்று கடந்த 1997 ஆம் ஆண்டு கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசையாக நடையை கட்டும் வீரர்கள்: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து 15/5!
இதே போன்று நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழந்து எடுத்த ரன்கள்:
2023- இந்தியாவிற்கு எதிராக ராய்ப்பூரில் நடந்த போட்டியில் 15/5
2001- இலங்கைக்கு எதிராக கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் 18/5
2010- வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நடந்த போட்டியில் 20/5
2003- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபரிதாபாத்தில் நடந்த போட்டியில் 21/5
பின்னர் வந்த பிரேஸ்வெல் 22 ரன்னிலும், சான்ட்னர் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹென்றி சிப்லே 2, லக்கி பெர்குசன் 1 ரன் எடுக்க பிளேர் டிக்னர் 2 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சில் முகமது ஷமி 6 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 3 விக்கெட் எடுத்து 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 6 ஓவர்கள் வீசி 3 மெய்டன்கள் உள்பட 2 விக்கெட் கைப்பற்றி 16 ரன்கள் விட்டுக் கொடுத்தார். முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீ யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
ஆட்டைய போட்ட மோசடி கும்பல்: ஐசிசியிடமிருந்து ஆன்லைன் மூலமாக ரூ.20 கோடி அபேஸ்!
எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாட இருக்கிறது. எனினும், ராய்ப்பூர் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி என்பதால், இது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்குமா? அல்லது பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்குமா? என்பது தெரியாமல் இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸைப் பொறுத்தவரையில் மைதானம் பௌலிங்கிற்கு தான் சாதகமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இன்னும் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி ஆட இருக்கிறது. இதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Raipur crowd has been fantastic in their first International game. pic.twitter.com/xAxFudsSfa
— Johns. (@CricCrazyJohns)