மோசமான பேட்டிங்: இலங்கை தொடரிலிருந்து கே எல் ராகுல் நீக்கம்?

By Rsiva kumarFirst Published Dec 25, 2022, 1:20 PM IST
Highlights

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணியின் ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களிலிலிருந்து இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்து முதலில் ஆடியது. முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களும், இந்திய அணி 314 ரன்களும் சேர்த்தனர்.

வங்கதேச வீரர்கள் ரொம்பவே ப்ரெஷர் கொடுத்தார்கள்: மேன் ஆஃப் தி மேட்ச் அஸ்வின் ஓபன் டாக்!

இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 236 ரன்கள் சேர்த்து 145 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. என்னதான் எளிய இலக்காக இருந்தாலும் வங்கதேச அணியின் பந்து வீச்சால் இந்திய அணியால் சமாளிக்க முடியவில்லை. 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் 100 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. அதில் 13 ரன்னிலும், அக்‌ஷர் 34 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக அஸ்வின் - ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிலைத்து நின்று ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வங்கதேசத்தை பஞ்சு பஞ்சாக்கிய அஸ்வின், ஷ்ரேயாஸ்: இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்த டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியம் என்றாலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர். ஆனால், ஒரு கேப்டனாக கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஆசிய கோப்பை தொடரிலிருந்தே ராகுல் பார்மில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்து நடகக் இருக்கும் டெஸ்ட் தொடர்கள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆகையால், இந்திய அணியை பலம் வாய்ந்த அணியாக்க பிசிசியை முயற்சித்து வருகிறது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ராகுலின் மொத்த பங்களிப்பு 57 ரன்கள்!

இதன் காரணமாக, வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி பங்கேற்கிறது. இந்த தொடரானது ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணிலிருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் மோசமான பேட்டிங் மட்டும் காரணமாக கருதாமல், அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அதை ஒரு காரணமாக காட்டி அவருக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் கே எல் ராகுல் தனது நீண்ட நாள் காதலியான ஆதியா ஷெட்டியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மோசமான பார்மில் விராட் கோலி: 2 டெஸ்ட் ஸ்கோரும் சேர்ந்தே 45 ரன்கள் தான்!

click me!