வங்கதேசத்தை பஞ்சு பஞ்சாக்கிய அஸ்வின், ஷ்ரேயாஸ்: இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

By Rsiva kumarFirst Published Dec 25, 2022, 11:26 AM IST
Highlights

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடந்த 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்டை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸில் 231 ரன்கள் சேர்த்தது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் ராகுலின் மொத்த பங்களிப்பு 57 ரன்கள்!

இதன் மூலம் 145 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி விளையாடியது. ஆனால், தொடக்க முதலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிடி இருவரும் இந்த்ய அணியை திணற வைத்ததோடு மட்டுமின்றி விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 4ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய உனட்கட் 13 ரன்களில் வெளியேறினார். ரிஷப் பண்ட் பொறுமையாக ஆடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் வந்த வேகத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மோசமான பார்மில் விராட் கோலி: 2 டெஸ்ட் ஸ்கோரும் சேர்ந்தே 45 ரன்கள் தான்!

இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு கை கொடுத்து அக்‌ஷர் படேல் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இறுதியாக இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது. அதிரடியாக ஆடிய அஸ்வின் 62 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உள்பட 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஷ்ரேயாஸ் ஐயர் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

IPL 2023: குறைவான தொகையில் நிறைவான தேர்வு.. KKR அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்! வலுவான ஆடும் லெவன்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது. ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி, வங்கதேசத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!