மோசமான பார்மில் விராட் கோலி: 2 டெஸ்ட் ஸ்கோரும் சேர்ந்தே 45 ரன்கள் தான்!

By Rsiva kumarFirst Published Dec 25, 2022, 10:04 AM IST
Highlights

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மொத்தமாக 45 ரன்கள் மட்டுமே எடுத்து தான் மோசமான பார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் தற்போது 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் ஆடியது. அதன்படி வங்கதேச அணி முதன் இன்னிங்ஸில் 227 சேர்த்தது. இதையடுத்து, ஆடிய இந்திய அணி 314 ரன்கள் எடுத்து 87 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி நிலைத்து நின்று ஆடி 231 ரன்கள் எடுத்தது. இதில், ஷகிர் ஹசன் 51 ரன்களும், லிட்டன் தாஸ் 73 ரன்களும் எடுத்தனர். பின்னர் 145 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணியில் தொடர்ந்து தொடக்க வீரரான கேப்டன் கே எல் ராகுல் (2) சொதப்பி வருகிறார். சுப்மன் கில் (7), புஜாரா (6) என்று வரிசையாக இந்திய அணி வீரர்கள் நடையை கட்டுகின்றனர். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 4ஆம் நாள் ஆட்டத்தை உனட்கட் மற்றும் அக்‌ஷர் படேல் விளையாடினர். உனட்கட் 16 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 13 ரன்கள் சேர்ந்திருந்த பவுலர் உனட்கட், ஷகில் அல் ஹசன் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.

BAN vs IND: நானே அவுட்டான கடுப்புல இருக்கேன்.. இவனுங்க வேற..! வரிந்து கட்டிய கோலி.. வைரல் வீடியோ

பின்னர் வந்த ரிஷப் பண்ட் பொறுப்பை உணர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் நீ என்ன சொல்லுறது நான் என்ன கேட்கிறது என்று 9 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். தற்போது நிதானமாக ரன்கள் சேர்த்து வந்து வந்த அக்‌ஷர் படேல் அதிபட்சமாக 34 ரன்கள் எடுத்து மெஹிடி பந்தில் போல்டானார். இந்த விக்கெட் எடுத்ததன் மூலம் மெஹிடி 5 விக்கெட் கைப்பற்றி வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.

IPL 2023: குறைவான தொகையில் நிறைவான தேர்வு.. KKR அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்! வலுவான ஆடும் லெவன்

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 5 பந்துகளில் 1 ரன் எடுத்தார். 2ஆவது இன்னிங்ஸில் 19 ரன்கள் எடுத்தார். தற்போது நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 24 ரன்கள் சேர்த்தார். 2ஆவது இன்னிங்ஸில் 1 ரன்கள் சேர்த்தார். ஆக, 2 டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி எடுத்த மொத்த ஸ்கோர் 45 ரன்கள் மட்டுமே. இவரை விட, 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பங்கேற்ற உனட்கட் முதல் இன்னிங்ஸில் 14 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 13 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு பவுலரால் அடிக்கும் போது அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலியால் ஏன் அடிக்க முடியவில்லை என்ற கேள்வியும், விமர்சனமும் அவர் மீது விழுகிறது.

IPL 2023: ஏலத்திற்கு பின் எதுவுமே மாறாத ஆர்சிபி அணியின் ஆடும் லெவன்

கடந்த 10 இன்னிங்ஸில் விராட் கோலி ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். இது அவரது மோசமான பார்மை காட்டுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 10 இன்னிங்ஸில் அதிகபட்சமாக 39 ரன்கள் மட்டுமே விராட் கோலி எடுத்துள்ளார். இதே போன்று இந்திய அணி டெஸ்ட் கேப்டனான கே எல் ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்தார். 2ஆவது இன்னிங்ஸில் 23 ரன்கள் எடுத்தார். 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 2 ரன்களும் சேர்த்து மொத்தமாக 57 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு கேப்டனாக இருப்பவர் எப்படி இருக்க வேண்டும்? ஒரு கேப்டன் எப்படி இருக்க கூடாது என்பதற்கு ராகுல் உதாரணமாக திகழ்கிறார். எந்த வகையிலாவது இந்திய அணிக்கு தனது பங்களிப்பை கொடுக்க வேண்டும். இதில், எந்த வகையில் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

இவ்வளவு ஏன், இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றால் அதற்கு முழுக்க முழுக்க விராட் கோலி மட்டுமே காரணமாக இருக்க முடியும். எத்தனை கேட்சுகளை கோட்டை விட்டார் தெரியுமா? லிட்டன் தாஸ் 20 ரன்களிலே ஆட்டமிழக்க வேண்டியவர். பந்து வீச்சாளர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை தான் கொடுக்க முடியும். அதன் மூலம் வரும் வாய்ப்பை தவறவே விடக் கூடாது. மீறி தவறவிட்டால் அது பேட்ஸ்மேனுக்கு சாதகமாகிவிடும். அப்படி தான் லிட்டன் தாஸ் 73 ரன்கள் வரை சேர்த்தார். இதன் மூலம் வங்கதேச அணி கூடுதலாக 50 ரன்கள் சேர்த்துள்ளது.

click me!