ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியை வெற்றிப் பாதை வரையில் அழைத்துச் சென்ற விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த ரசிகர்களும் கை தட்டி தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. இதில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்னும் எடுக்கவே 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக்கில் வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஒரு கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டில் வெளியேறவே, இந்திய அணி 1.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
அதன் பிறகு தான் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். விராட் கோலி 38 ரன்கள் எடுத்திருந்த போது தொடக்க வீரராக அல்லாமல் 3ஆவது வரிசையில் களமிறங்கி 11,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2ஆவதாக களமிறங்கி சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் 13,685 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 3ஆவது வரிசையில் களமிறங்கி 12,662 ரன்கள் எடுத்துள்ளார்.
தொடர்ந்து விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 67ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும், அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அவர் 116 பந்துகளில் 6 பவுண்டரி உடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து மைதானத்திலிருந்து ஒட்டு மொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். எனினும், சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட விரக்தியில் விராட் கோலி தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2011 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் விராட் கோலி 83 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 100* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று, 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதல் போட்டியில் விராட் கோலி 126 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2019 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்று நடந்த 2023 உலகக் கோப்பையில் 12 ரன்களில் ஆட்டமிழக்க வேண்டியது. மிட்செல் மார்ஷ் கேட்ச் விடவே, கோலி 85 ரன்கள் எடுத்தார்.
India vs Australia: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த வார்னர்!
VIRAT KOHLI 🐐
32,000+ fans giving standing ovation for the King - What a beautiful video. pic.twitter.com/H6Y9n2ySeu
Look at the Hunger he is showing , its not frustation , but rather how badly he wants to do perform and win the World Cup for India !!
King Kohli 👑
. pic.twitter.com/Zdz9dKUJM3