ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட நிலையில், மைதானத்திலேயே அப்படியே அமர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையின் 5ஆவது லீக் போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், டேவிட் வார்னர் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். இஷான் கிஷான் ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக்கில் வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஒரு கேப்டனாக தனது முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் டக் அவுட்டில் வெளியேறவே, இந்திய அணி 1.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
அதன் பிறகு தான் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். விராட் கோலி 38 ரன்கள் எடுத்திருந்த போது தொடக்க வீரராக அல்லாமல் 3ஆவது வரிசையில் களமிறங்கி 11000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, 2ஆவதாக களமிறங்கி சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் 13,685 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 3ஆவது வரிசையில் களமிறங்கி 12,662 ரன்கள் எடுத்துள்ளார்.
தொடர்ந்து விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 67ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும், அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். அவர் 85 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறவே கேஎல் ராகுல் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கேஎல் ராகுல் 91 ரன்களில் இருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட ராகுலுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. எப்படியிருந்தாலும் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தால் மட்டுமே கேஎல் ராகுலால் சதம் அடிக்க முடியும்.
India vs Australia: உலகக் கோப்பையில் அதிவேகமாக 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த வார்னர்!
அதுவும், முதலில் சிக்ஸர் அடித்தால் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். ஆனால், அவர் பவுண்டரி அடித்து அதன் பிறகு சிக்சர் அடித்தால் அவரால் சதம் அடிக்க முடியும். ஆனால், அவர் எடுத்த உடனே பவுண்டரி அடிக்கும் முயற்சியில் அடிக்கவே பந்து சிக்ஸருக்கு சென்றது. இதன் காரணமாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அவரது சதம் அடிக்கும் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. வெற்றிக்குப் பிறகு பேசிய கேஎல் ராகுல் கூறியிருப்பதாவது: "நான் அதை நன்றாக அடித்தேன், இறுதியில் 100 க்கு எப்படி செல்வது என்று கணக்கிட்டேன். 4 மற்றும் ஒரு சிக்ஸருக்கான ஒரே வழி, ஆனால் அந்த சதத்தை எட்டாததற்கு எந்த கவலையும் இல்லை, ”என்று போட்டியின் பிந்தைய விளக்கக்காட்சியில் போட்டியின் வீரருக்கான விருதை ராகுல் கூறினார்.
India vs Australia: ஆஸிக்கு ஆப்பு வச்ச ஜடேஜா; தட்டு தடுமாறி 199 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா!
"நிச்சயமாக நிறைய பேசுவதற்கு இல்லை, நான் நன்றாக குளித்துவிட்டு ஓய்வு பெறுவேன் என்று நினைத்தேன். விக்கெட்டில் கொஞ்சம் இருக்கிறது, எனவே சிறிது நேரம் டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடுங்கள் என்று விராட் கூறினார். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறிது உதவி கிடைத்தது,” என்று கேஎல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.